தேசிய சொத்தாக இருக்கும் இலங்கை டெலிகொம்மை(SLT), பிரைவேட் நிறுவனமாக மாற்றி, அதனூடாக கிடைக்கும் பணத்தை எடுத்து வங்கியில் போட்டால், சர்வதேச நாணய நிதியம்(IMF) இலங்கைக்கு பணம் தந்து உதவும் என்று அன் நிறுவனம் அறிவித்தது. இதனை அடுத்து இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, இலங்கை டெலிகாம்மை ஏலம் விட்டார். 3 முக்கிய கம்பெனிகள் இதனைக் கைப்பற்ற களத்தில் இறங்கியது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு கம்பெனி, இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானியின் ஜியோ மற்றும் லைக்கா(LYCA) டெலிகாம் ஆகிய 3 முக்கிய கம்பெனிகள் போட்டியிட்டது.
இறுதியில் டெண்டரில், முகேஷ் அம்பானிக்கே இலங்கை டெலிகொம் விற்க்கப்பட உள்ளதாக முடிவானது. இருப்பினும் இலங்கை அரசியல் அமைப்பு சட்டங்களை பாவித்து, லைக்கா டெலிகொம், கடந்த திங்கள் அன்று இந்த முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் தடை உத்தரவு ஒன்றை வாங்கியுள்ளது. இதனால் இலங்கை டெலிகாம், அம்பானிக்கு செல்ல தற்காலிக தடை ஏற்பட்டுள்ள நிலையில். நடந்து ஏலத்தையும் ரத்துச் செய்யுமாறும். மீண்டும் டெண்டரை இலங்கை அறிவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றில் மேலும் ஒரு வழக்கை தொடுத்துள்ள லைக்கா டெலிகாம்.
இதன் காரணத்தால் நடந்து முடிந்த ஏலத்தை, அப்படியே நிறுத்தி. மீண்டும் ஒரு புதிய ஏலத்தை அறிவிக்க இலங்கை அரசுக்கு நீதிமன்றம் ஊடாக அச்சுறுத்தலை விடுத்துள்ளது லைக்கா டெலிகாம். இந்த விடையம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவின் முதன்மை செல்வந்தரான முகேஷ் அம்பானியோடு, கடும் மோதலில் இறங்கியுள்ளார் லைக்கா டொலிகாம் உரிமையாளர் சுபாஷ்கரன் அவர்கள்.
இலங்கையில் பிறந்து வெளிநாட்டில் வாழும் ஒரு இலங்கையருக்கே, இலங்கை டெலிகாம் உரிமை செல்ல வேண்டும் என்ற கோணத்தில் லைக்கா டெலிகாம் நிறுவன வக்கீல் வாதாடி வருகிறார். இலங்கை டெலிகாம் உரிமம் தற்போது யாருக்கு செல்லும் என்ற இழு பறி நிலை தோன்றியுள்ளது. அத்தோடு இது இந்திய அரசின் கவனத்தையும் ஈர்த்துள்ளதோடு, ஜப்பான் நாடும் அதிருப்த்தியடைந்துள்ளது.