சனி, 9 மார்ச், 2024

நடிகர் அஜித்துக்கு காதுக்கும் மூளைக்கும் இடையேயான நரம்பில் சிறிய கட்டி : ICU வார்டில்



நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடா முயற்ச்சி படத்தில் நடித்து வருகிறார். முதல் கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் முடிவடைந்த நிலையில், சென்னை திரும்பி இருந்தார். அதன்பின்னர் 2ம் கட்ட படப்பிடிப்புக்காக அவர் செல்ல இருந்த நேரம். வைத்தியசாலை சென்று முழு உடலையும் பரிசோதனை செய்தார். அஜித் வழமையாக வெளிநாடு செல்ல முன்னர், அல்லது திரும்பிய உடனே வழமையாக முழு உடலையும் பரிசோதனை செய்வது வழக்கம்.

இந்த நிலையில் CT ஸ்கேன் மூலம் மருத்துவர்கள் முழு உடலையும் ஸ்கேன் செய்து பரிசோதனை செய்து பார்த்ததில், அவரது காதில் இருந்து மூளைக்குச் செல்லும் நரம்பில் சிறிய கட்டி ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவசரமாக சத்திர சிகிச்சை ஒன்றை மேற்கொண்ட மருத்துவர்கள் அதனை அகற்றி, அஜித்தை ஐ.சி.யூ வார்டில் அனுமதித்தார்கள்.

அதன் பின்னர் அவர் இன்று(9) வீட்டுக்கு திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இன் நிலையில் இசையமைப்பாளர் யுவன், அஜித் சீக்கிரம் நலம்பெறவேண்டும் என்று, கூறியுள்ளார்.