வெள்ளி, 8 மார்ச், 2024

48 மணி நேரத்தில் மொஸ்கோ மீது தாக்குதல் நடக்கலாம் அமெரிக்க புலனாய்வுத் தகவல் !



இன்னும் 48 மணி நேரத்தில் ரஷ்ய தலை நகர் மொஸ்கோ மீது தீவிரவாதிகள் தாக்க உள்ளதாக அமெரிக்க புலனாய்வுத்துறை அறிவித்துள்ளது. இதனை அடுத்து மொஸ்கோவில் வசிக்கும் அமெரிக்கர்கள் மற்றும் பிரித்தானியர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்குமாறு 2 நாடுகளும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் ரஷ்ய அரசு குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. யார் இந்த தீவிரவாதிகள் என்ற விடையத்தை அமெரிக்கா இதுவரை ரஷ்ய அரசோடு பகிர்ந்துகொள்ளவில்லை.

சமீபத்தில் ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் சிறைச்சாலையில் மர்மமான முறையில் இறந்துபோனார். இதனை அடுத்து புட்டின் அரசுக்கு எதிராக பெரும் ஆர்பாட்டம் வெடித்துள்ள நிலையில், யார் தாக்கப் போகிறார்கள் என்பதே மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. மக்கள் அதிகம் கூடும் பகுதிக்கு செல்லவேண்டாம் என தமது நாட்டு மக்களுக்கு அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் அறிவுறுத்தியுள்ளார்கள். 

இதனால் மொஸ்கோவில் கடும் பாதுகாப்பு நடைமுறைகளை ரஷ்ய அரசு அமுல்படுத்தியுள்ளது. இதனூடாக அமெரிக்க புலனாய்வுத் துறை எந்த அளவு மற்றைய நாடுகளை வேவுபார்த்து வருகிறது என்பது குறித்தும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டி உள்ளது.