நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களின், 2 குடும்ப உறுப்பினர்கள், நேற்றைய தினம் அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமியை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்பு மிகவும் ரகசியமாக இடம்பெற்றபோதும், மீடியாக்களில் கசிய ஆரம்பித்துள்ளது. லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணிக்கு இணையாக, பலம் பொருந்திய கூட்டணி ஒன்றை உருவாக்க பழனிச்சாமி முயன்று வருகிறார். ஒரு மெகா கூட்டணியை அமைத்து குறைந்த பட்சம் 20 தொகுதிகளில் வெற்றிபெறவேண்டும் என்பதே அவர் எண்ணம்.
இதன் காரணத்தால் திமுகவோடு பல ஆண்டுகளாக இணைந்து செயல்படும் விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் வளைத்துப் போட பழனிச்சாமி கடும் முயற்ச்சி எடுத்துள்ளார். இதேவேளை, சீமான் குடும்ப உறுப்பினர்களையும் அவர் ரகசியமாக தனது வீட்டில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இருப்பினும் மத்தியில் ஆட்சி செய்யும் ப.ஜக கட்சியோடு அதிமுக கூட்டு வைத்துள்ளது, சீமானுக்கு முட்டுக்கட்டையாக உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் நாம் தமிழர் கட்சியோடு இணைந்து ஒரு மெகா கூட்டணியை திரட்ட கடும் முயற்சியில் இறங்கியுள்ளார் பழனிச்சாமி.
அதன் அடிப்படையில், பா.ம.க., - தே.மு.தி.க., புதிய தமிழகம், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி என்று பல கட்சிகளோடு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை இந்த அனைத்துக் கட்சிகளையும் விட பலமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் நாம் தமிழர் கட்சியோடு நேற்று ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் பழனிச்சாமி.