ப.ரஞ்சித் இயக்கத்தில் உருவான படமான மெட்ராஸ்சில் நடித்து படிப்படியாக முன்னேறியவர், நடிகை கேத்ரின் தெரசா. பின்னர் வேறு ஒரு படத்தில் ஆபாசமாக நடிக்கச் சொன்னதற்கு அவர் மறுத்துவிட்டதாக சமீபத்தில் கூறி இருந்தார். அதாவது தொப்புளில் தேனை ஊற்றி, அதன் மேல் பூக்களை தூவி ஹீரோ முத்தம் கொடுப்பது போன்ற காட்சி ஒன்றிலேயே இவர் நடிக்க மறுத்ததாக கூறி இருந்தார். இது தொடர்பாக பயில்வான் ஆராட்சி செய்து ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.
மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு பட வாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்த்த இவருக்கு, தமிழில் வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்.கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம் என்பதால், தெலுங்கில் எப்போதும், கவர்ச்சியை அள்ளி வீசி கொண்டிருக்கிறார்.இந்நிலையில் நடிகை கேத்ரின் குறித்து பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றில் பேசி உள்ளார். அதில், நடிகை கேத்ரின் தெரசா, அண்மையில் ஒரு பேட்டியில், இயக்குநர் ஒருவர் என் வயிற்றில் தேன் ஊற்றி மலர்களை கொட்டுவது போல காட்சி எடுப்பதாக சொல்லி இருந்தார். எனக்கு அந்த காட்சி ஆபாசமாக இருந்தது. இதனால், அந்த காட்சியில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டேன் என்று கேத்ரின் அந்த பேட்டியில் கூறி இருந்தார்.
அட அது சுத்தப் பொய் என்று பயில்வான் கூறியுள்ளார். யார் இந்த இயக்குநர் என்று விசாரித்த போது தான் ஆர்யா நடித்த கடம்பன் படத்தில் இயக்குநர் ராகவன் இந்த காட்சியை எடுத்து இருக்கிறார். அந்த படத்தில் அந்த காட்சி இடம் பெற்று இருக்கிறது. ஆனால், அந்த காட்சியில் நடிக்க மறுத்துவிட்டேன் என்று கேத்ரின் தெரசா அந்த பேட்டியில் பொய் சொல்லி இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார். அட எத்தனையோ பிரச்சனைகள் இருக்கே, இப்ப இதுவா முக்கியம் ? என்று நெட்டிசன்கள் பயில்வானை வறுத்து எடுக்க ஆரம்பித்துள்ளார்கள்.