செவ்வாய், 5 மார்ச், 2024

திமுக கொள்ளையிட்ட பணத்தை கைப்பற்றி மக்களிடம் கொடுப்போம்- மோடி பேச்சால் பரபரப்பு !



மத்திய அரசு தமிழ் நாட்டிக் கொண்டு வரும் திட்டங்களை, திமுக சரியாக நிறைவேற்றுவது இல்லை என்றும். அவர்கள் கொள்ளையடித்து வைத்துள்ள பணத்தை கைப்பற்றி, மக்களுக்கு கொடுக்க உள்ளதாகவும் மோடி காட்டமாகப் பேசியுள்ளார். இந்த விடையம் தமிழகத்தில் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வந்துள்ளார் பிரதமர் மோடி. விமான நிலையத்தில் இருந்து நந்தனத்தில் நடைபெறும் பொதுக்கூட்ட மேடைக்கு கார் மூலம் சென்ற மோடிக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சென்னையில் உள்ள நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்த பாஜக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "வணக்கம் சென்னை. திறமை, வர்த்தகம், பாரம்பரியம் ஆகியவற்றின் மையப்புள்ளியாக சென்னை திகழ்கிறது. எனக்கும் தமிழ்நாட்டுக்குமான உறவு மிகவும் பழமையானது. சென்னை வரும்போதெல்லாம் உற்சாகம் அடைகிறேன் என்று பேசினார்.

தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் சிலருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஆதரவு பெருகுவதால் சிலர் அச்சம் அடைகின்றனர். சென்னையில் வளர்ச்சி திட்டங்களுக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது. சென்னையில் மெட்ரோ, விமான நிலையங்கள் என பல்வேறு வளர்ச்சி திட்டங்களை முன்னெத்து வருகிறோம். ஆனால் அவற்றில் சுரண்டப்படுகிறது. சரியாக திட்டங்களை திமுகா நிறைவேற்றவில்லை. அவர்களிடம் உள்ள பணத்தை கைப்பற்றி, மக்களுக்கு கொடுக்க நான் விரும்புகிறேன் என்று மோடி பேசியுள்ளார். இது திமுகவை மிகவும் கேவலமான ஒரு நிலைக்கு கொண்டுசென்றுள்ளது என்று தான் கூறவேண்டும்.