மீண்டும் மீண்டும் அதிர்ச்சி சம்பவங்கள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஜார்கண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்ணை கணவர் முன்பே 10 பேர்கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் பலரும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வருகை தருவது வழக்கம். அந்த வகையில், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளை சுற்றிப் பார்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டை சேர்ந்த தம்பதி வந்தனர். ஆசிய நாடுகளில் பைக்கில் சென்று தங்களுக்கு பிடித்தமான இடங்களை சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற திட்டத்துடன் வந்த இவர்கள் முதலில் பாகிஸ்தான் வந்தனர்.
பாகிஸ்தானில் பல்வேறு இடங்களுக்கும் சென்ற இந்த தம்பதி அங்கிருந்து வங்கதேசம் சென்றது. வங்கதேசத்தில் உள்ள முக்கிய சுற்றுலாதலங்களை சுற்றிப்பார்த்த பிறகு இந்தியாவுக்கு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த தம்பதி வருகை தந்தனர். இந்தியாவில் பல இடங்களை சுற்றி பார்த்துவிட்டு நேபாளம் செல்ல திட்டமிட்டு இருந்தனர்.பைக்கிலேயே பல்வேறு இடங்களுக்கு செல்லும் இந்த தம்பதி இரவு நேரத்தில் தங்களிடம் உள்ள பொருட்களை வைத்து தற்காலிக கொட்டகை அமைத்து அங்கேயே தங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அந்த வகையில், தான் ஜார்க்கண்டின் தும்கா மாவட்டத்தில் உள்ள ஹன்ஸ்திகா பகுதியில் ஸ்பெயின் சுற்றுலா தம்பதி, குடில் அமைத்து இரவு தங்கியுள்ளனர்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்து இருவரையும் தாக்கியுள்ளனர். மேலும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். ஸ்பெயின் பெண்ணின் கணவரையும் இந்தக் கும்பல் தாக்கியுள்ளது. இதில் அவரும் காயம் அடைந்துள்ளார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த போலீசார், வெளிநாட்டு பயணிகள் இருவர் சாலையோரம் கிடந்ததை கண்டுள்ளனர். நிர்வாணமாக கிடந்த ஸ்பெயின் நாட்டுப் பெண்ணையும் அவரது கணவரையும் மீட்ட பொலிசார், வழக்குப் பதிவு செய்து 3 பேரை கைதுசெய்துள்ள நிலையில். 7 பேர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்தியாவில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் என்பது சகல மாநிலங்களிலு சர்வ சாதாரணமாக இடம்பெற்று வருகிறது.