சினிமா மற்றும் சின்னத் திரை என்று பலருக்கு அறிமுகமான பிரபல நடிகர் தான், பிர்லா போஸின். இவர் தற்போது ரஜனியின் படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். நேற்றைய தினம் 10 பேர் கொண்ட குழு ஒன்று, அவரை தாக்கிவிட்டு அவரது மகனை கடத்திச் சென்று கட்டையால் அடித்துவிட்டு அங்கேயே விட்டுச் சென்ற விடையம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நடிகர் பிர்லா போஸ், தனது வீட்டில் வண்டியை பார்க்கிங் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் இதில், தனது மகனை பிரச்சினை செய்தவர்கள் கடத்தி சென்று தாக்கியதாகவும் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நான் சென்னையில் அப்பார்ட்மென்ட் ஒன்றில் வசித்து வருகிறேன். என் வீட்டுக்கு கீழ் வீட்டில் இருக்கும் பையனை பார்க்க நண்பர்கள் வந்தார்கள். அவர்கள் என் காரை சேதப்படுத்தி விட்டார்கள். இதுபற்றி நான் அவர்களிடம் கேட்க, அந்தப் பசங்க வயது வித்தியாசம் இல்லாமல் என்னைத் தகாத வார்த்தையில் திட்ட ஆரம்பித்து விட்டார்கள். என் மகனும் பதிலுக்கு சத்தம் போட்டான். இந்த சம்பவம் நடந்து இரண்டு மாசம் ஆச்சு.
ஆனால், போன வாரம் டியூஷன் போயிட்டு வந்த என் மகனை பத்து பேர் கொண்ட கும்பல் கடத்திக் கூட்டிட்டு போய் அடிச்சு இருக்காங்க. இரத்தம் வெளியே வராதபடிக்கு எல்லாமே உள்காயம். இதை கீழ்வீட்டுப் பையன் தான் செஞ்சுருக்கான். இது தெரிஞ்சதுமே நான் பதறிப்போயிட்டேன். இதுகுறித்து காவல்துறையில் புகார் கொடுத்திருக்கேன். அவங்களும் விசாரிட்டு இருக்காங்க. படிக்கற வயசுல மாணவர்கள் மத்தியில் இருக்கற இந்த வன்முறை எனக்கு அதிர்ச்சியா இருக்கு என்று பிர்லா போஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.