LYCA production தயாரிப்பில், மாபெரும் பட்ஜெட்டில் உருவாக உள்ள திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளார், ஜேசன். இவர் வேறு யாரும் இல்லை, நடிகர் விஜயின் மகன். இதனால் இந்தப் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது. இருப்பினும் சில தினங்களுக்கு முன்னர் ஜேசன் இயக்கும் படத்தில் மம்முட்டியின் மகனும் நடிகருமான துல்க்கர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இருப்பினும் உண்மையில் ஜேசன் இயக்க உள்ள படத்தில் சிவகார்த்திகேயனே நடிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனை லைக்கா நிறுவனம் உறுதிசெய்யவில்லை என்றாலும். பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்து. சிவகார்த்திகேயன் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில், ஜேசன் விஜய் இயக்கத்தில் உருவாக உள்ள இந்தப் படத்திற்கு இசை, அனிருத் என்றும் கூறப்படுகிறது. இருந்தாலும் லைக்கா தரப்பு ரகுமானையும் நாடியுள்ளதாக கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் குறித்த படத்திற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது என்று தான் கூறவேண்டும்.