சனி, 2 மார்ச், 2024

சின்னம் உங்களுக்கு ராசி இல்லை பேசாமல் மாற்றிவிடுங்கள் கிண்டல் செய்த நீதிபதிகள் !



நாம் தமிழர் கட்சி, டெல்லி உச்சநீதிமன்றில் வழக்குத் தாக்கல் ஒன்றை செய்திருக்கிறது. கரும்பு விவசாயி சின்னம் வேண்டும் என்ற இந்தக் கோரிக்கையின் மீதான விவாதம் மார்ச் 1ம் திகதி இடம்பெற்ற நேரம். உங்களுக்கு இந்தச் சின்னம், ராசி இல்லை போலத் தெரிகிறதே, பேசாமல் சின்னத்தை மாற்றி விடுங்கள் என்று நீதிபதி மன்மோகன் கிண்டலடித்துள்ளார்.

அதுபோக நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட கட்சியே அல்ல, பின்னர் எவ்வாறு கோரிக்கை வைக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பினார். கடந்த தேர்தலில் 6 சத விகித வாக்குகள் பெற்ற கட்சி நாங்கள் என வக்கீல் எடுத்துரைத்து, நீதிபதியின் வாயை அடைத்தார். தேர்தல் ஆணையம் தரப்பில், விதிமுறைகள் அடிப்படையில் மட்டுமே சின்னங்கள் ஒதுக்கப்படுகின்றன என வாதிக்கப்பட்டது. அதேவேளை விதிமுறைகளுக்கு அமைய, முதலில் விண்ணப்பித்த தரப்புக்கே சின்னம் ஒதுக்கப்படும் என்று கூறினார் நீதிபதி. 

சின்னம் தவறான நபர்களுக்கு வழங்கப்பட்டால், பல வாக்குகள் தவறான நபர்களுக்கு சென்றுவிடும், எனவே இதனை தடுத்தாகவேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வக்கீல் வாதாடிய நிலையில், இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளார் உச்சநீதிமன்ற நீதிபதி.