தமிழகத்தில் 10 இளைஞர்களை எடுத்துக்கொண்டால் அதில் 6 இளைஞர்கள் ஆபாச இணையத்தளங்களுக்கு அடிமையாகி விட்டதாக ஆய்வுத் தகவல் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இளைஞர்கள் ஆபாச இணையங்களை பார்த்து, தம்மை திருப்த்திப்படுத்திக் கொண்டு வாழ்ந்து வரும் நிலையில். திருமணம் முடித்தால் கூட, அந்தப் பழக்கத்தை விடுவதாக இல்லை. இதனால் தாம்பத்திய வாழ்கையில் பெரும் விரிசல்கள் ஏற்படுவதாகவும். இதன் காரணத்தால் விவாகரத்து என்பது இன்று மலிந்துவிட்டதாகவும் அந்த ஆய்வுத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் ஆபாச இணையத் தளங்களை தேடும் மக்கள் பட்டியலில் இந்தியா 3ம் இடத்தில் இருக்கிறது. கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் 12வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது முன்னேறி 3ம் இடத்தைப் பிடித்துள்ளது இந்தியா. ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான விவாகரத்து விண்ணப்பங்கள் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு வருவதாகவும். இதில் சில வழக்குகள் மிக மிக வினோதமானவை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னுடன் உடலுறவில் ஈடுபடும்வேளை கூட, கணவர் மோபைல் போனில் ஆபாச இணையத்தைப் பார்கிறார் என்று கூறி, ஒரு மனைவி விவாகரத்தை விண்ணப்பித்துள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் ஊடாக, இளைஞர்கள் எந்த அளவுக்கு ஆபாச இணையத் தளங்களுக்கு அடிமையாகிவிட்டார்கள் என்பதனை நமக்கு உணர்த்தி நிற்கிறது.