ரஷ்யாவின் மிக முக்கியமான எதிர்கட்சி தலைவராக இருக்கும், அலெக்சி, சிறைச்சாலையில் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் ரஷ்யாவுக்கு வெளியே ஜேர்மனி நோக்கி விமானத்தில் பறந்தவேளை. அவர் உட்கொண்ட காஃபியில் யாரோ விஷத்தை கலந்து கொடுத்தார்கள். இதனால் அவர் சென்ற விமானம் அவரசமாக ஜேர்மனியில் தரை இறக்கப்பட்டு. அவரை மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அதன் பின்னர் அவர் உடல் நலம் தேறி, ரஷ்யா சென்றவேளை அவரை விமான நிலையத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார் புட்டின்.
கடந்த சில ஆண்டுகளாக ரஷ்ய சிறையில் இருந்த, அலெக்ஸி கடந்த 16ம் திகதி மரணமடைந்ததாக ரஷ்யா அறிவித்த நிலையில். இன்றும் மார்ச் 1ம் திகதி அவரது இறுதி ஊர்வலம் இடம்பெற்றது. இதில் பல ஆயிரம் மக்கள் கலந்துகொண்டதோடு. புட்டினுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பி இருந்தார்கள். இதனால் புட்டினுக்கு எதிராக வலுவான ஒரு எதிர்ப்பு மக்கள் மத்தியில் கிளம்பியுள்ளது என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே உக்ரைன் நாட்டை புட்டின் தாக்க ஆரம்பித்ததில் இருந்து பல ரஷ்யர்கள் இதனை எதிர்த்து வரும் நிலையில். தற்போது எதிர் கட்சி தலை சாவு என்பது, ரஷ்யாவின் ஒரு ஜனநாயக ஆட்சி இல்லை என்பதனை தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது.