செவ்வாய், 5 மார்ச், 2024

Baby Face Horror ஒட்டுமொத்த பிரிட்டன் பொலிசாரும் தேடும் இளைஞன் - அருகில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை !



ஒட்டு மொத்த பிரித்தானிய பொலிசாரும் தற்போது தனிப்படை அமைத்து தேடி வரும் நபர் இவர் தான். வெறும் 19 வயதே ஆகும் இந்த இளைஞ் அமோனியாவைப் பாவித்து ஒரு வகை திரவத்தை செய்துள்ளார். லங்கஷியாரில் 30 வயதுப் பெண் ஒருவரைப் பின் தொடர்ந்து சென்று, அவர் மீது இந்த திரவத்தை ஊற்றித் தாக்கியுள்ளார். கடுமையான பாதிப்புக்கு உள்ளான அந்தப் பெண் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்.

19 வயதே ஆனா "மைக்கி" என்ற இந்த இளைஞர் தனது வீட்டில் இருந்து தப்பிச் சென்றுவிட்டார். பொலிசார் தனிப்படை அமைத்து தேடி வரும் நிலையில். அவரது வீட்டில் பல வகையான திரவங்கள்(ஆசிட்) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் தனது பாதுகாப்பிற்காக மேலும் பல திரவங்களை எடுத்துக் கொண்டு, தப்பிச் சென்றிருக்க கூடும் என்று பொலிசார் சந்தேகப்படுவதால். 

இந்த இளைஞரைக் கண்டால் அருகே போகவேண்டாம் என்று பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். அத்தோடு நாடு தழுவிய  ரீதியில் பல இடங்களில் இவனைப் பிடிக்க பொலிசார் வலைவீசி தேடிவருகிறார்கள். தலைமறைவாகியுள்ள இந்த இளைஞர் சிக்குவாரா ? தெரியவில்லை.