திங்கள், 11 மார்ச், 2024

அமெரிக்காவின் பற்றியோட் மிசைல் சிஸ்டத்தை தகர்த்த ரஷ்யா- 400 மில்லியன் இழப்பு !


 

அமெரிக்கா 5 பற்றியோட் ஏவுகணை தளங்களை உக்கிரைனுக்கு வழங்கியது. அவை ஒவ்வொன்றும் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இதில் உள்ள ஒரு ஏவுகணையின் விலை 6 மில்லியன் டாலர் ஆகும். இதனைப் பாவித்து ரஷ்யாவின் பல போர் விமானங்களை உக்ரைன் வீழ்த்தியுள்ளது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யாவின் எந்த ஒரு போர் விமானமும் பறக்க முடியாத சூழ் நிலை ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட , ரஷ்யாவின் S-300 ரக போர் விமானத்தையும் உக்ரைன் சுட்டு வீழ்த்தியது. 

இதனால் கடும் ஆத்திரம் அடைந்த ரஷ்யா, இந்த ஏவுகணை தளத்தை அழிக்க முடிவு கட்டியது. ஆனால் ரஷ்யாவின் போர் விமானம் வந்தாலோ இல்லையேல் ஏவுகணை வந்தாலோ இந்த பற்றியோட் சிஸ்டம் உடனே இயங்க ஆரம்பித்து, தானாகவே செயல்பட்டு அதனை அழித்துவிடும். இதன் காரணத்தால் ரஷ்யா தனது ஹைப்பர் சோனிக் ஏவுகணையை பாவித்து, 2 தளங்கை அழித்துள்ளது. ஹைப்பர் சோனிக் ஏவுகணை என்பது, ஏவும் இடத்தில் இருந்து நேரடியாக விண்வெளி நோக்கி சீறிப் பாயும். பின்னர் விண்வெளியில் இருந்து செங்குத்தாக வந்து தனது இலக்கை தாக்கும். 

இதனால் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை தடுத்து நிறுத்த முடியாது. அவை ராடர் கண்களில் வீழ்வது இல்லை. நேரடியாக விண்வெளியில் இருந்து பூமி நோக்கி வந்து குறித்த இலக்கை தாக்கும். இதனூடாக நேற்று(10) ரஷ்யா 2 தளங்களை அழித்துள்ளது. மீதம் 3 தளங்களே உக்ரைனில் உள்ளது.