சனி, 2 மார்ச், 2024

ஒவ்வொரு தொகுதிக்கும் 150 கோடியை இறைக்கும் தி.மு.க விஜய் நடுக்க காச்சல் !

 


ரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தி.முக மற்றும் காங்கிரஸ் கூட்டணியே அதிக இடத்தில் வெல்லும் என்று பல கருத்துக் கணிப்புகள் எதிர்வு கூறி வரும் நிலையில். தலா ஒரு தொகுதிக்கு சுமார் 150 கோடி வரை பணத்தை வாரி இறைத்து செலவு செய்து வருகிறது தி.மு.க. இதற்கான பணத்தை முன் நாள் MP ஜெகத் ரட்சகனே வழங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் அரசியலில் இறங்கியுள்ள நிலையில். தி.மு.காவின் செல்வாக்கு வெகுவாகச் சரிந்துவிட்டதாக பலர் பேசி வருகிறார்கள். பெரும் இளைஞர் பட்டாளத்தை தன்வசப்படுத்தியுள்ள விஜய், 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்கும் திட்டத்தில் இறங்கியுள்ளார்.

இது அதிமுகாவை மட்டும் அல்ல, திமுக மற்றும் BJP போன்ற பெரும் கட்சிகளை திண்டாட வைத்துள்ளது. இன் நிலையில் திமுக இந்த நாடாளுமன்ற தேர்தலில் சிறிய பின்னடைவை சந்தித்தால் கூட, அது திமுகாவின் தமிழ் நாட்டு அரசியலை வெகுவாகப் பாதிக்கும். இதனால் தொகுதிக்கு 150 கோடி என பணத்தை வாரி இறைத்து, திமுகா தனது பலத்தை நிரூபிக்க முனைப்புக் காட்டி வருகிறது. 

சகல கட்சிகளுக்கும் தற்போது வினோதமான நோய் ஒன்று தொற்றி வருகிறது. அது வேறு ஒன்றும் இல்லை "விஜய் காச்சல்" தான் !