செவ்வாய், 27 பிப்ரவரி, 2024

வவுனியாவில் இடம்பெற்ற மேழி எழுபது பிரமாண்ட விழா!!



எழுத்தாளர் கலாநிதி மேழிக் குமரனின் எழுபது அகவையையும் ஐம்பதாண்டு இலக்கிய பயணத்தையும் முன்னிட்டு இரு நூல்கள் வெளியீட்டு நிகழ்வு  (25.02.2024)  காலை 9 மணிக்கு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.


வவுனியா தமிழ்ச் சங்கத்தின் நிறுவுனர், தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் த.மங்களேஸ்வரன், சிறப்பு விருந்தினர்களாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், கல்வி அமைச்சின் ஓய்வு நிலை மேலதிக செயலாளர் உடுவை எஸ்.தில்லை நடராஜா, கௌரவ விருந்தினர்களாக வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் ஓய்வு நிலை பீடாதிபதி க.பேர்ணாட், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் ந.சிவசக்தி ஆனந்தன், இலக்கியவாதிகள்,சமூக ஆர்வலர்கள்,திணைக்கள உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த விழாவில் எழுத்தாளர் கலாநிதி மேழிக்குமரனின் கொள்ளிக்காசு சிறுகதைத் தொகுப்பு நூலும் ‘அல்சைமர்’ மருத்துவ நூலும்  வெளியிடப்பட்டன.