செவ்வாய், 12 மார்ச், 2024

17 பேரை போட்டுத் தள்ளிய புட்டின் ! பல நாடுகளில் நடந்த கொலைப் பட்டியல் !


 

தனக்கு எதிராக கருத்துக்களை முன்வைக்கும் ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் என்று, 17 பேரை புட்டின் கொலைசெய்துள்ளதாக எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளது. இதனை ரஷ்ய எதிர்கட்சி உறுப்பினர்கள் ஆவணமாக மாற்றியுள்ள நிலையில். சமீபத்தில் ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் நவலான் சிறைச்சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது போல 16 கொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும்.

இதில் பல ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள் அடங்குவதாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சுமதியுள்ளது. இதில் மிக முக்கியமான நபர். Alexander Litvinenko ,அவர் KGB என்னும் ரஷ்ய உளவுத்துறையில் வேலை பார்த்துவிட்டு பின்னர் பிரிட்டன் வந்து அரசியல் தஞ்சம் கோரி இருந்த நிலையில். பிரித்தானியாவில் உள்ள MI5 பிரிவினர் அவரை மிக மிக பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்திருந்த நிலையில். அவர் குடிக்கும் வைன் கிளாசில், பொலோனியம் என்ற கடும் கதிரியக்க பொருளை ரஷ்ய உளவுத்துறை கலந்து விட்டது. இது பிரித்தானிய மண்ணில் நடந்த படுகொலை. இதனை இன்றுவரை ஸ்காட்லன் யாட் பொலிசாரால் முற்றாக கண்டுபிடிக்க முடியவில்லை. இது எப்படி நடந்தது என்பது ..


இன்றுவரை யாருக்கும் தெரியாது. ஆனால் "பொலோனியத்தை" கலந்தால் ஒரு மனிதரால் 7 தொடக்கம் 21 நாட்கள் மட்டுமே உயிர்வாழ முடியும். உடலில் பல மாறுதல்கள் ஏற்பட்டு, திடீர் கேன்சர் தோன்றி இறந்து விடுவார்கள். அதனை தடுக்க உலகில் சிகிச்சை எதுவும் இல்லை. இப்படி பரிதாபமாக இறந்தவர் தான்..Alexander Litvinenko.   

Read more ...

திங்கள், 11 மார்ச், 2024

75 வருட திமுக செய்யாத சாதனை ! 48 மணி நேரத்தில் 60 லட்சம் தொண்டர்கள் TVK கழகத்தில் !



75 வருட பழமை வாய்ந்த கட்சியான திமுக விடம் சுமார் 1 கோடி உறுப்பினர்கள் உள்ளார்கள். அதேபோல 50 வருட பழமையான கட்சியான அதிமுக விடம் சுமார் 50 லட்சம் உறுப்பினர்கள் உள்ளார்கள். ஆனால் இந்த 2 மிகப் பெரிய கட்சிகளையும் 48 மணி நேரத்தில் தூக்கி சாப்பிட்டுள்ளது, நடிகரின் கட்சியான TVK கழகம். தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர்கள் சேர்க்கை ஆரம்பமாகி 48 மணி நேரம் ஆகியுள்ள நிலையில். அதில் 60 லட்சம் பேர் இணைந்துள்ளார்கள் என்று அக்கட்சி உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. 

இதே நிலை நீடித்தால் விஜய் சொன்ன அந்த 2 கோடி என்பது இன்னும் சில வாரங்களில் எட்டி விடும் என்று தான் சொல்லவேண்டும். 7.2 கோடிப் பேர் தமிழ் நாட்டில் வசித்து வரும் நிலையில். அவர்களில் 4.5 கோடிப் பேர் வாக்குரிமை பெற்றவர்களாக உள்ளார்கள். இதில் 2 கோடிப் பேரை அங்கத்தவர்களாக இணைக்க வேண்டும் என்பதே விஜய் அவர்களின் கொள்கையாக உள்ளது. இது சாத்தியம் என்றால்... 2026ம் ஆண்டு நடக்கவுள்ள தமிழக சட்ட மன்றத் தேர்தலில் விஜயின் கட்சி கணிசமான இடங்களில் வெற்றியைப் பெறும் என்றே கூறலாம்.

தற்போது இந்த 60 லட்சம் உறுப்பினர்கள் என்ற தொகையே, திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளை ஆட்டம் காண வைத்துள்ளது. மக்களே ஒன்றைக் கவனித்தீர்களா ? திமுக வும்  சரி அதிமுகவும் சரி விஜய் தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் முன்வைக்கவில்லை. அமைதியாகவே இருக்கிறார்கள். இது தான் அவர்கள் குழம்பிப் போய் உள்ளார்கள் என்பதற்கு சரியான ஆதாரம். விஜய்க்கு இருக்கும் இளைஞர் பட்டாளம், வேறு எந்த ஒரு தலைவருக்கும் அல்லது கட்சிக்கும் இல்லை என்பது தான் முக்கியமான விடையம். 2026 நடக்கவுள்ள தேர்தலில் பெரும் களோபரம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பல மாற்றங்கள் நிகழவும் வாய்ப்புகள் உள்ளது. 

Read more ...

அமெரிக்காவின் பற்றியோட் மிசைல் சிஸ்டத்தை தகர்த்த ரஷ்யா- 400 மில்லியன் இழப்பு !


 

அமெரிக்கா 5 பற்றியோட் ஏவுகணை தளங்களை உக்கிரைனுக்கு வழங்கியது. அவை ஒவ்வொன்றும் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இதில் உள்ள ஒரு ஏவுகணையின் விலை 6 மில்லியன் டாலர் ஆகும். இதனைப் பாவித்து ரஷ்யாவின் பல போர் விமானங்களை உக்ரைன் வீழ்த்தியுள்ளது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யாவின் எந்த ஒரு போர் விமானமும் பறக்க முடியாத சூழ் நிலை ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட , ரஷ்யாவின் S-300 ரக போர் விமானத்தையும் உக்ரைன் சுட்டு வீழ்த்தியது. 

இதனால் கடும் ஆத்திரம் அடைந்த ரஷ்யா, இந்த ஏவுகணை தளத்தை அழிக்க முடிவு கட்டியது. ஆனால் ரஷ்யாவின் போர் விமானம் வந்தாலோ இல்லையேல் ஏவுகணை வந்தாலோ இந்த பற்றியோட் சிஸ்டம் உடனே இயங்க ஆரம்பித்து, தானாகவே செயல்பட்டு அதனை அழித்துவிடும். இதன் காரணத்தால் ரஷ்யா தனது ஹைப்பர் சோனிக் ஏவுகணையை பாவித்து, 2 தளங்கை அழித்துள்ளது. ஹைப்பர் சோனிக் ஏவுகணை என்பது, ஏவும் இடத்தில் இருந்து நேரடியாக விண்வெளி நோக்கி சீறிப் பாயும். பின்னர் விண்வெளியில் இருந்து செங்குத்தாக வந்து தனது இலக்கை தாக்கும். 

இதனால் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை தடுத்து நிறுத்த முடியாது. அவை ராடர் கண்களில் வீழ்வது இல்லை. நேரடியாக விண்வெளியில் இருந்து பூமி நோக்கி வந்து குறித்த இலக்கை தாக்கும். இதனூடாக நேற்று(10) ரஷ்யா 2 தளங்களை அழித்துள்ளது. மீதம் 3 தளங்களே உக்ரைனில் உள்ளது. 

Read more ...

ஞாயிறு, 10 மார்ச், 2024

மிகவும் கேவலமாக தி.மு.க காலில் விழுந்த கமல்- வெறும் 1 சிட் கொடுத்த ஸ்டாலின் !



மக்கள் நீதி மையம் மிகவும் கீழ்த்தரமாக தி.மு.க காலில் விழுந்து விட்டது என்று நடிகை கஸ்தூரி ரிவீட் போட்டு பெரும் சர்சையை கிளப்பி உள்ளார். அதுபோக தி.மு.க வோடு டீல் போட்ட கமலுக்கு வெறும் 1 ராஜ்யசபா சீட்டை ஒதுக்கியுள்ளார் ஸ்டாலின். அப்பாடா அதுவே போதும் சார் என்ற அளவில் கமல் உள்ளதாக கூறப்படுகிறது. அட 1 சீட்டுக்காகவா இப்படி எல்லாம் போய் அடி பணிந்தீர்கள் என்று பலர் கமலை கிழித்து தொங்கவிட்ட வண்ணம் உள்ளார்கள் !

ஆனால் கமல்ஹாசனோ ""இது மனிதர் உணர்ந்துகொள்ள மனித அரசியலே அல்ல.. அல்ல .." அதையும் தாண்டி புனிதமானது என்று கூறி விட்டு அப்படியே நகர்ந்து செல்கிறார். இதில் பா.ஜ.க வானதி சிறீனிவாசன் வேறு, தனக்கு பயந்து கமல் இந்த முறை போட்டியிடவே இல்லை என்று பேசி கமலை வம்புக்கு இழுத்துகொண்டு இருக்கிறார். பாவம் இந்த மனுஷன் என்ன தான் செய்வார் ? போங்கள் !

Read more ...

நலம் தானே அஜித் ? போன் செய்த TVK கழகத் தலைவர் விஜய்- ட்ரென் ஆகும் செய்தி !



சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தல அஜித், சிறிய ஆப்பரேஷன் ஒன்றின் பின்னர் வீடு திரும்பியுள்ளார். இதனை அறிந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய், அஜித்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு, நலம் விசாரித்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. என்ன தான் வெளியே அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் வலையத் தளத்தில் முட்டி மோதிக்கொண்டாலும். அன்று முதல் இன்றுவரை விஜய் மற்றும் அஜித் இருவருமே நண்பர்களாகத் தான் இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய், போன் போட்டு அஜித்தை நலம் விசாரித்த செய்தி காட்டுத் தீ போல பரவி வருகிறது. என்ன அஜித்குமார் நலம் தானே என்று விஜய் கேட்க்க. ஆம் எல்லாம் ஓகே ஒரு சிறிய ஆப்பரேஷன் அவ்வளவு தான் என்று, பதில் கூறியுள்ளார் அஜித். இருவரும் சுமார் 7 தொடக்கம் 8 நிமிடம் வரை உரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதுமட்டும் அல்ல, விஜய் ஆரம்பித்துள்ள கட்சிக்கும் அஜித் வாழ்த்து தெரிவித்து விட்டார். 2026ல் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பல திரையுலக பிரபலங்கள் விஜய்க்கு ஆதரவாக களத்தில் இறங்குவார்கள் என்று எதிர்பார்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக , சத்தியராஜ், உட்பட பலர் விஜய்க்கு ஆதரவாக துணை நிற்பார்கள் என்றும் கூறப்படுகிறது. பொறுத்து இருந்து தான் பார்கவேண்டும்.

Read more ...

சனி, 9 மார்ச், 2024

நடிகர் அஜித்துக்கு காதுக்கும் மூளைக்கும் இடையேயான நரம்பில் சிறிய கட்டி : ICU வார்டில்



நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடா முயற்ச்சி படத்தில் நடித்து வருகிறார். முதல் கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் முடிவடைந்த நிலையில், சென்னை திரும்பி இருந்தார். அதன்பின்னர் 2ம் கட்ட படப்பிடிப்புக்காக அவர் செல்ல இருந்த நேரம். வைத்தியசாலை சென்று முழு உடலையும் பரிசோதனை செய்தார். அஜித் வழமையாக வெளிநாடு செல்ல முன்னர், அல்லது திரும்பிய உடனே வழமையாக முழு உடலையும் பரிசோதனை செய்வது வழக்கம்.

இந்த நிலையில் CT ஸ்கேன் மூலம் மருத்துவர்கள் முழு உடலையும் ஸ்கேன் செய்து பரிசோதனை செய்து பார்த்ததில், அவரது காதில் இருந்து மூளைக்குச் செல்லும் நரம்பில் சிறிய கட்டி ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவசரமாக சத்திர சிகிச்சை ஒன்றை மேற்கொண்ட மருத்துவர்கள் அதனை அகற்றி, அஜித்தை ஐ.சி.யூ வார்டில் அனுமதித்தார்கள்.

அதன் பின்னர் அவர் இன்று(9) வீட்டுக்கு திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இன் நிலையில் இசையமைப்பாளர் யுவன், அஜித் சீக்கிரம் நலம்பெறவேண்டும் என்று, கூறியுள்ளார். 

Read more ...

வெள்ளி, 8 மார்ச், 2024

48 மணி நேரத்தில் மொஸ்கோ மீது தாக்குதல் நடக்கலாம் அமெரிக்க புலனாய்வுத் தகவல் !



இன்னும் 48 மணி நேரத்தில் ரஷ்ய தலை நகர் மொஸ்கோ மீது தீவிரவாதிகள் தாக்க உள்ளதாக அமெரிக்க புலனாய்வுத்துறை அறிவித்துள்ளது. இதனை அடுத்து மொஸ்கோவில் வசிக்கும் அமெரிக்கர்கள் மற்றும் பிரித்தானியர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்குமாறு 2 நாடுகளும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் ரஷ்ய அரசு குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. யார் இந்த தீவிரவாதிகள் என்ற விடையத்தை அமெரிக்கா இதுவரை ரஷ்ய அரசோடு பகிர்ந்துகொள்ளவில்லை.

சமீபத்தில் ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் சிறைச்சாலையில் மர்மமான முறையில் இறந்துபோனார். இதனை அடுத்து புட்டின் அரசுக்கு எதிராக பெரும் ஆர்பாட்டம் வெடித்துள்ள நிலையில், யார் தாக்கப் போகிறார்கள் என்பதே மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. மக்கள் அதிகம் கூடும் பகுதிக்கு செல்லவேண்டாம் என தமது நாட்டு மக்களுக்கு அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் அறிவுறுத்தியுள்ளார்கள். 

இதனால் மொஸ்கோவில் கடும் பாதுகாப்பு நடைமுறைகளை ரஷ்ய அரசு அமுல்படுத்தியுள்ளது. இதனூடாக அமெரிக்க புலனாய்வுத் துறை எந்த அளவு மற்றைய நாடுகளை வேவுபார்த்து வருகிறது என்பது குறித்தும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டி உள்ளது. 

Read more ...

வியாழன், 7 மார்ச், 2024

இனி 999க்கு டயல் செய்தால் ட்ரோன் தான் வரும்... அரசின் கோமாளித்தனக் கூத்து என்ன தான் நடக்கிறது ?



மக்களின் வரிப் பணத்தை எடுத்து, பிரித்தானிய அரசு மிகவும் கேவலமான விடையம் ஒன்றை செய்ய ஆரம்பித்துள்ளது. அதாவது பிரித்தானியாவில் உள்ள அவசர பொலிஸ் சேவைப் பிரிவை விரிவாக்குகிறோம் என்ற போர்வையில் இது நடைமுறைக்கு வர உள்ளது. நீங்கள் ஒரு அவசரமாக 999க்கு அழைப்பை விடுத்தால் தற்போது பொலிசார் குறைந்த பட்சம் 5 நிமிடங்களில் உங்களுக்கு உதவ வந்து விடுவார்கள். ஆனால்...

அரசாங்கம் என்ன செய்கிறது என்றால், இனி வரும் காலங்களில் ட்ரோன்களை(ஆளில்லா விமானத்தை) அனுப்ப முயற்ச்சி எடுக்கிறது. அதுவும் சுமார் 230M மில்லியன் பவுண்டுகளை செலவு செய்து பல ட்ரோன்களை அரசு தயாரித்து வருகிறது. அவர் அவர் தேவை மற்றும் அவசர நிலைக்கு ஏற்ப்ப ட்ரோன்களை சம்பவ இடத்திற்கு முதலில் அனுப்புவார்களாம். அதன் பின்னர் கடும் தேவை என்றால் பொலிசார் அங்கே செல்வார்களாம் என்று அரசு கூறுகிறது. அப்படி என்றால் ஒரு கொலை நடக்க இருக்கிறது என்று வைத்துக் கொண்டால், இந்த ட்ரோன் அவர்களை எப்படிக் காப்பாற்றும் ?

இது எந்த அளவு சாத்தியம் ? என்பது புரியவில்லை. ஆனால் இந்தச் செய்தி பிரித்தானிய மக்களிடையே பெரும் அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளதோடு ஆழும் கான்சர்வேட்டிவ் கட்சிமீது அவ நம்பிக்கையை உண்டாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும். அடுத்து வரும் பொதுத் தேர்தலில் ஆழும் கட்சி பெரும் வீழ்ச்சியடையும் என கருத்துக் கணிப்பு ஏற்கனவே கூறும் நிலையில். இது போன்ற கோமளித்தனமாக விளையாட்டுகளில் அரசு இறங்கியுள்ளது. 

Read more ...

அமைச்சர் உதயநிதியை பதவி நீக்க வேண்டிய அவசியமில்லை: சனாதன வழக்கில் உயர்நீதிமன்றம்



சனாதனம் பற்றி அமைச்சர் உதயநிதி பேசியதால் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னையில் கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சனாதன ஒழிப்பு மாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி, சனாதன எதிர்ப்பு மாநாடு என்று பெயர் வைக்காமல், சனாதன ஒழிப்பு மாநாடு என்று பெயர் வைத்தது பொருத்தம் என்று கூறினார்.

கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போல  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டியது என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார். இது இந்தியா முழுவதும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. சனாதனத்தை எதிர்த்துப் பேசியதை இந்து மதத்தையே எதிர்த்துப் பேசியதாக விஸ்வஇந்து பரிஷத், பாஜக போன்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறினர். அமைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டு இப்படிப் பேசியிருக்கக் கூடாது. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலினையும், சேகர் பாபுவையும்  பதவி நீக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

 இந்நிலையில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோருக்கு எதிரான கோவாராண்ட் வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி அனிதா சம்பத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் எதனடிப்படையில் அவர் அமைச்சர் பதவியில் நீடிக்கிறார் என்று கேள்வி எழுப்ப முடியாது என்றும் கூறி உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, ஆ.ராசா ஆகியோருக்கு எதிரான கோவாரண்ட் வழக்கை முடித்து வைத்தார். 

பல்வேறு மாநிலங்களில் தொடுக்கப்பட்ட இது போன்ற வழக்குகளில் யாரும் தண்டிக்கப்படவில்லை என்றும் நீதிபதி கூறினார்.  நீதிபதி மேலும் கூறுகையில், அமைச்சர்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும். அறநிலையத்துறை அமைச்சராக இருந்து கொண்டு, சேகர்பாபு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கக் கூடாது என்று தெரிவித்தார்.

Read more ...

நாங்க நலமா இல்லை: எடப்பாடி பழனிச்சாமி கடும் பதிலடி கொடுத்துள்ளார் !



நீங்க நலமா என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கும் நிலையில், நாங்கள் நலமாக இல்லை என்று முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் வலைத்தளப் பதிவில் "நீங்கள் நலமா" என்று கேட்கும்  ஸ்டாலின் அவர்களே நலத் திட்டங்கள் நின்றுப்போச்சு! சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போச்சு!

சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, மின்கட்டணம் உயர்ந்தாச்சு! விலைவாசி விண்ணைத் தொட்டாச்சு! எங்கு காணினும் போதைப்பொருள் புழக்கம் என்ற அவலநிலைக்கு தமிழ்நாடு ஆளாச்சு! இப்படி, வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்ட உங்கள் விடியா ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை!“ என்று பதிவிட்டுள்ளார்.

Read more ...

நீங்கள் நலமா? திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்



அரசின் திட்டங்கள் மக்களுக்குச் சென்றடையும் விதமாக நீங்கள் நலமா என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். இந்த் திட்டத்தின் படி, முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் தொடர்பு கொண்டு அரசின் திட்டங்கள் அவர்களுக்குச் சென்று சேர்ந்திருக்கிறதா என்பதை உறுதி செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பயனாளிகளிடம் தொடர்பு கொண்டு பேசினார்.  அப்போது ஒரு புகார் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் மரியாதையுடன் நடந்து கொண்டார்களா… உரிய நடவடிக்கை எடுத்தார்களா… நடவடிக்கை திருப்தியாக இருந்தத தா என்று மனுதார் ஒருவரிடம் முதலமைச் சர் கேட்டார். அதற்கு அந்த மனுதார நடவடிக்கை திருப்தியாக இருந்த து என்று கூறினார்.

நீங்கள் நலமா திட்டம் குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்தில் ஏராளமான மனுக்கள் என்னைத் தேடித் தேடி வழங்கப்பட்டது. அப்படி வழங்கப்பட்ட கோரிக்கைகளை நமது அரசு நிறைவேற்றிக் கொடுத்த காரணத்தால் – இப்போது நான் செல்லும் பயணங்களில் மக்களின் கைகளில் மனுக்களைக் காண முடியவில்லை; மாறாக, அவர்களது முகங்களில் மகிழ்ச்சியைக் காண்கிறேன்! அந்த மகிழ்ச்சியை மேலும் உறுதிசெய்ய இப்போது துவங்கப்பட்டுள்ளதுதான், “நீங்கள் நலமா?” என்ற திட்டம். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட வலைத்தளத்தை நான் இன்று தொடங்கி வைத்து ஒரு சில பயனாளிகளிடம உரையாடி அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தபோது உளம் மகிழ்ந்தேன். ஒவ்வொரு குடும்பத்தினரது குரலையும் கேட்டு அவர்களது குறைகளைப் போக்கும் அரசாகக் திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டு வருகிறது.

அதேபோல அமைச்சர்கள், உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோரும் உங்களிடம் கலந்துரையாடி நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்துக் கருத்துகளைப் பெற்று, அதனடிப்படையில் அரசின் சேவைகளை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் உருவாக்கப்படும்.  தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் குறித்து உங்களிடமிருந்து பெறப்படும் கருத்துகள் இந்த வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். கோட்டையில் உட்கார்ந்து திட்டங்கள் தீட்டி அறிவிப்பதோடு எனது கடமை முடிந்து விட்டதாக நான் எப்போதும் நினைப்பது இல்லை. ஒவ்வொரு திட்டமும் எந்த நோக்கத்துக்காக அறிவிக்கப்பட்டதோ - அந்த நோக்கம் நிறைவேற்றப்பட்டு வருகிறதா என்பதுதான் எனக்கு முக்கியம்!

ஏனென்றால் ஒவ்வொரு திட்டமும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலானவை. கடுமையான நிதி நெருக்கடிச் சூழலில் நிறைவேற்றப்படுபவை. ஆகவே, ஒதுக்கப்படும் நிதி ஒவ்வொரு குடிமகனையும் சென்று சேர வேண்டும்; நலத்திட்டம் ஒரு ரூபாய் என்றாலும் அது உங்களிடம் வந்து சேர வேண்டும் என்று நினைத்து திட்டங்களைத் தீட்டுபவன் நான்” என்று கூறியிருக்கிறார்.

Read more ...

ஒரு பிரதமர் இப்படியா பொய்களைச் சொல்வது? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி



தமிழக மக்களுக்கு நிதி வழங்கியுள்ளதாக பிரதமர் மோடி கூறியதற்கு யாருக்குக் கொடுத்தார்? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அண்மையில் தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி, ஒன்றிய அரசு மாநில அரசுக்குத் தராமல் மக்களுக்கு நேரடியாக நிதி வழங்கி வருவதாக் கூறியிருந்தார்.  இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையால் தமிழ்நாட்டுக்குத் வர வேண்டிய நிதி உதவிகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருவதை நான் அதிகம் விளக்கத் தேவையில்லை.

சில நாட்களுக்கு முன்னால் சென்னைக்கு வந்து பேசிய பிரதமர் மோடி, மாநில அரசுக்குத் தராமல் மக்களுக்கு நேரடியாக நிதி வழங்கி வருவதாக அப்பட்டமான ஒரு பொய்யைச் சொல்லி விட்டுச் சென்றுள்ளார். எந்த மக்களுக்குக் கொடுத்தார் என்பதைச் சொல்லி இருந்தால் அந்த மக்களுக்குக் கிடைத்ததா என்று கேட்கலாம்.  இரண்டு மாபெரும் இயற்கை பேரிடரை எட்டு மாவட்டத்து மக்கள் சந்தித்தார்கள். இதற்காக 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கேட்டோம். அதற்கு 1 ரூபாயையாவது ஒதுக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு உதவி செய்தாரா பிரதமர்? இப்படியா பொய்களைச் சொல்வது?

ஒன்றிய அரசிடம் இருந்து நிதி வரவில்லை என்றாலும் இந்த எட்டு மாவட்டத்துக்கு மக்களுக்காக, மாநிலப் பேரிடர் நிதி மற்றும் அரசுத் துறைகளில் இருந்து 3406.77 கோடி ரூபாய் அளவுக்கு நிதி வழங்கியும், நிவாரணப் பணிகளைச் செய்தும் மக்கள் நலம் காத்து வரும் அரசுதான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசு” என்று கூறியுள்ளார்.

Read more ...